யு.பி.ஐ பரிவர்த்தனைக்கு வரி விதிப்பதை ரத்து செய்யக்கோரி திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

0 15
Stalin trichy visit

திருச்சி அக்.7 யு.பி.ஐ பரிவர்த்தனைக்கு வரி விதிப்பதை ரத்து செய்யக்கோரி வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சியில் ஆர்ப்பாட்டம். மாவட்ட தலைவர் எஸ்.பி. பாபு தலைமையில் வியாபாரிகள் பங்கேற்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டம் சார்பாக யு. பி.ஐ. பண பரிவர்த்தனைக்கு வணிகர்களுக்கு 0.4.சதவீத வரி விதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிப்பதை தடை செய்ய கோரியும், சில்லறை வணிகத்தின் வளர்ச்சியை நசுக்க நினைக்கும் மத்திய அரசின் விரோத

போக்கை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ். பி. பாபு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். செயலாளர் வெற்றிவேல் பொருளாளர் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர்கள் எம் கே எஸ் சாகுல் ஹமீது, துவாக்குடி டி சரவணன், மாநில இணை செயலாளர் எம் இ சபி முகமது, மாரி என்கிற பத்மநாபன் , நிரஞ்சன் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜாபர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கோபால் செயலாளர் மைதீன் பொருளாளர் முஸ்தபா துணை தலைவர் எம் இ எஸ் சமது எஸ் எம் டி மணிகண்டன் அமைப்பாளர் கே கே நகர் அனிபா மாவட்ட துணைத் தலைவர்கள் காமராஜ் நகர் முஸ்தபா காட்டூர் அப்துல்லா ஸ்ரீரங்கம் சிவசாமி மற்றும் துவாக்குடி யாசின் இணைச் செயலாளர்கள் பஜார் மைதீன் துவாக்குடி ராஜா சுலைமான் குளித்தலை சதக் மற்றும் ராஜகோபால் வையம்பட்டி அன்பு அருள் மற்றும் தில்லை நகர் கே சி பழனிச்சாமி
உள்பட 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வளர்க்காதே வளர்க்காதே கார்ப்பரேட்
வர்த்தகத்தை  வளர்க்காதே ரத்து செய் ரத்து செய் யுபிஐ பண பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரத்து செய் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய் பன்னாட்டு வணிகத்தை தடை செய்து சில்லறை  வணிகர்களை  வாழ விடு என்பன உள்ளிட்ட  முழக்கங்களை  எழுப்பினர்

Leave A Reply

Your email address will not be published.