“ஆரோக்கியம்” குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

0 19
Stalin trichy visit

திருச்சி, அக்.8 திருச்சி செவன்த் டே அட்வென்டிஸ்ட்ஸ் பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருச்சி செவன்த் டே அட்வான்டேஸ்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர் இந்த பேரணியை நகர நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பள்ளி முதல்வர் எட்வின் நேசஸ் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணி திருச்சி வ.உ.சி. சிலையில் துவங்கி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் சென்ற மாணவர்கள் மதுவிற்கு எதிராகவும், நகரை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாகவும், புகைப்பழக்கத்திற்கு எதிராகவும், இயற்கை மற்றும் சத்தான உணவு உட்கொள்ளவும், எந்தவித போதைப்பொருட்களையும் பயன்படுத்த கூடாது என கோஷங்கள் எழுப்பினர். இந்த பேரணியில் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.