ஒரு கோடி வீடுகளில் குலதெய்வ பூஜை : அசோக் சிங்கால் நூற்றாண்டு தொடக்க விழாவில் விஎச்பி அறிவிப்பு

0 19
Stalin trichy visit

திருச்சி, அக்.8 ஒரு கோடி வீடுகளில் குலதெய்வ பூஜை – அசோக் சிங்கால் நூற்றாண்டு தொடக்க விழாவில் விஎச்பி அறிவிப்பு

விஷ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாடு சார்பில் மறைந்த முன்னாள் அகில உலக செயல் தலைவர் அசோக் சிங்கால் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி திருச்சி மகாலட்சுமி நகரிலுள்ள  தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. அம்மன் ஸ்டில் நிறுவன உரிமையாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார், விஎச்பி அகில பாரத செயற்குழு உறுப்பினர் கோபால் ரத்தினம் முன்னிலை வகித்தார், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் சுவாமி த்ரையம்பகேஸ்வரானந்தர் ஆசியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய விஎச்பி அகில பாரத இணை பொதுச்செயலாளர் ஸ்தாணுமாலயன் பேசியபோது….. இப்போது பலர் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று அது என்னவென்று தெரியாமலேயே பேசுகின்றனர்.

உலகில் வாழ்வில் அனைத்து இந்துக்களிடமும் ஜீவராசிகளிடமும் உள்ள வாழ்வியல் தத்துவம் தான் சனாதன தர்மம் அதனை யாராலும் ஒழிக்கவோ அழிக்கவோ முடியாது. இந்து சமுதாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பாக அசோக் சிங்கால் நூற்றாண்டு விழாவில் ஆண்டு முழுவதும் இந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.

நம் ஒவ்வொருவர் வீடுகளிலும் குடும்பத்துடன் இணைந்து குலதெய்வ பூஜை நடத்த வேண்டும், இந்த நூற்றாண்டு விழா ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் குலதெய்வ பூஜை நடத்தவும் அதற்கான பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளோம். இந்து தர்மத்தை காப்பாற்ற சாஸ்திரங்கள், வேதங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இதேபோல் ஆர்.எஸ்.எஸ். தென் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் ஆறுமுகம் பேசும்போது…. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வகையில் நவம்பர் 14ஆம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம் அன்று நாம் கந்த சஷ்டி பாராயணம் செய்து, சங்கல்பம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நவம்பர் 24ஆம் தேதி தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நாம் அலை அலையாய் திரண்டு சங்கல்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கேசவ விநாயகம், ஆடிட்டர் சந்தோஷ் பரத்வாஜ், வேதாபால் நிர்வாக இயக்குனர் ரமேஷ், சின்மயா மெஷின் செயலாளர் வெங்கடேசன், அகில பாரத வக்கீல் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்கணேஷ், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விஎச்பி , ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநில செயலாளர் கணேசன் வரவேற்றார். திருச்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.