பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபருக்கு ஓராண்டு சிறை

0 15
Stalin trichy visit

திருச்சி, அக்.9  திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் உசேன்பீவி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது தோழியான பாக்கியம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் வெள்ளிவாடி பிரிவு சாலை அருகே சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் உசேன்பீவி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

இது குறித்து இனாம் குளத்தூர் போலீஸ் நிலையத்தில் உசேன்பீவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கிலி பறித்த நபரை தேடி வந்தனர். அப்போது திண்டுக்கல் நத்தத்தை சேர்ந்த சாகுல்அமீது (35) என்பவரை பிடித்து விசாரித்ததில், சங்கிலியை பறித்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி ஜூடிசியல் மாகிஸ்ட்ரேட்டு கோர்ட்டு எண் 5-ல் நடந்து வந்தது.

இந்த வழக்கில் மாகிஸ்ட்ரேட்டு டார்வின்முத்து நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சாகுல்அமீதுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.