போதைப் பழக்கத்திற்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

0 18
Stalin trichy visit

திருச்சி, அக். 12 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பில் புகை, மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடைபெற்றது.

திருச்சி TVS டோல்கேட், ஜமால் முகமது கல்லூரி அருகில் நடைபெற்றது இந்தநிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் சகோதரர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாரத்தான் நிகழ்ச்சியை கொடி அசைத்து துவங்கி வைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் சிறப்புரையாற்றினர்.

“NO” சொல்லு போதைக்கு! “YES” சொல்லு வாழ்க்கைக்கு! என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இம்மாரத்தான் மூலம், போதைப் பொருட்களால் ஏற்படும் தனிநபர் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்தும், இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளர் சம்சுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பிலால், அமானுல்லா, கனி, சர்புதீன், அன்சர், யாசிர் உள்ளிட்டோர் நிகழ்வில் முன்னிலை வகித்தனர். போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்மாரத்தான் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.