திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
திருச்சி, அக்.12 திருச்சி பிரண்ட் லைன் மருத்துவமனையில் நேற்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் இருதயம் நுரையீரல் மூளை தண்டுவடம் எலும்பு மூட்டு இரைப்பை கல்லீரல் கணையம் குடல் மலவாய் ரத்த நாளம் காது மூக்கு தொண்டை கண் மனநலம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல சிகிச்சைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது மேலும் எக்கோ, ஸ்கேன், இசிஜி, பிளட் சுகர் டெஸ்ட், மூட்டு தேய்மானம் உள்ளிட்டவைகள் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாமில் நடைபெற்றது.
இதில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளை பெற்றனர்.