முருக பக்த கோடிகள் சார்பாக உறையூர் மாரியம்மன் கோவிலில் நடந்த அன்னதான விழா
திருச்சி, அக்.12 முருக பக்த கோடிகள் சார்பாக உறையூர் மாரியம்மன் கோவிலில் நடந்த அன்னதான விழா:-
மகாளய அமாவாசையை முன்னிட்டு முருக பக்த கோடிகள் சார்பாக ஆண்டுதோறும் பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் மூன்றாம் ஆண்டு நிகழ்வாக திருச்சி உறையூர் மேல கல் நாயக்கன் தெரு மாரியம்மன் கோவில் மண்டபத்தில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது
இந்த அன்னதான விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ட்ரீம்ஸ் அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் வசந்தா கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் மாரியம்மன் க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமி தரிசனம் நடைபெற்றது இவ்விழாவில் உறையூர் மேல கல் நாயக்கர் தெரு மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்வை சிறப்பித்தனர். மேலும் இந்த அன்னதான விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சந்தனகுமார் மற்றும் சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.