வேளாண் கல்லூரி மாணவிகள் பணி அனுபவத் திட்டத்தின் மூலம் பகுத்தாய்வு

0 20
Stalin trichy visit

கோகுலம் நாட்டு பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் மற்றும் கோகுலம் கோழி பண்ணை மற்றும் மீன் குட்டை ஆகியவற்றை வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் மூலம் பகுத்தாய்வு செய்த இறுதி ஆண்டு கல்லூரி மாணவிகள்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் சாத்தனூர் கிராமத்தில் வசிக்கும் இலக்கியா மாட்டு சாணத்தின் மூலமாக மதிப்பு கூட்டு பொருட்களான பஞ்சகவ்ய விநாயகா, பஞ்சகவ்ய விளக்கு, பசுச்சாண திருநீறு ,பசுச்சாண தூபவத்தி, பசுச்சாண விளக்கு மேடை முதலியவற்றை தயாரித்து வருகிறார். இதனை நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள் பார்வையிட்டு இதன் செயல்முறை விளக்கங்களை கேட்டறிந்தனர்.

இப்பொருட்கள் நன்கு காயவைத்த பசுஞ்சாணம் மற்றும் பசும்சாணம் , பிசின் மாவு ஆகியவற்றை நன்கு கலந்து உருவாக்கப்படுகிறது. நான்கு மாடுகளில் இருந்து பெறப்படும் மாட்டு சாணத்தை பயன்படுத்தி சிறிய அளவிலான மதிப்பு கூட்டு பொருட்களை உருவாக்கி விநியோகம் செய்து வருகிறார். மதிப்பு கூட்டுப் பொருட்களை தானே தயாரிப்பதோடு தேவை ஏற்படின் இரு வேலையாட்களை பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கிறார். மேலும் சாம்பலை பயன்படுத்தி பல் பொடியும் தயாரித்து வருகிறார் . சாணத்தை பயன்படுத்தி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டு பொருட்கள் எளிதாக மக்கும் தன்மையும் கொண்டிருப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதுடன் உடையும் தன்மை இல்லாததாகவும் உள்ளது. பஞ்சகவ்ய விநாயகர் ,பஞ்சகவ்ய விளக்கு , பசுஞ்சாணம் சாம்பிராணி, பசுஞ்சாண திருநீர் ஆகியவை சேர்த்து ரூபாய் 100 என்று விநியோகம் செய்து வருகிறார்.

கோகுலம் கோழி பண்ணை :

சாத்தனூரில் வசித்து வரும் இலக்கியா ரூபாய் ஆறு லட்சத்திற்கு 20 அடி அகலம் 80 அடி நீளம் உள்ள கோழிப்பண்ணையஅமைத்துள்ளார். இப்பணையில் இரண்டு அணி நாட்டுக்கோழிகள் உள்ளன ஒரு அணி கன்னி கோழியாகவும் மற்றொரு அணி முட்டையிடும் கோழி ஆகவும் உள்ளது. இங்கு முட்டை கோழிகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன .ஒரு கோழி 220 முட்டைகளை இடுகின்றது .இரண்டு வருடத்திற்கு பிறகு இக்கோழிகள் விற்கப்பட்டு புதிய அணிகள் பண்ணையில் சேர்க்கப்படுகின்றன.
இப்பண்ணையில் மொத்தம் இதுவரை மூன்று அணிகள் வளர்க்கப்பட்டுள்ளது. தற்பொழுது இரு அணிகள் மட்டுமே உள்ளது.
ஒரு தொழிலாளியால் முட்டைகள் சேகரிக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 600 சொனாலி வகை நாட்டுக்கோழிகள் உள்ளன . கோழிகளை ஊட்டச்சத்து மிக்கதாக வளர்ப்பதற்கு துணை ஊட்டச்சத்தாக GROVIPLEX மற்றும் நோய்களை தவிர்ப்பதற்கு ( BT) BECTOFLOX ஆகியவை வழங்கப்படுகிறது. 2 Kg சேவல் மற்றும் 1.5 Kg கோழி ரூபாய் 400க்கு விற்கப்படுகிறது.மேலும் அக்னீஸ்வரன் பராமரிக்கும் மீன் குட்டைகளை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டு மீன் வளர்க்கும் முறையினையும் அதன் பராமரிப்பு செலவு பற்றியும் விளக்கமாக கேட்டறிந்தனர் மேலும் மீன் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.