ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் பொறுப்பேற்பு

0 13
Stalin trichy visit

திருச்சி, நவ.6 திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணை ஆணையராக ரா.பிரகாஷ் நேற்று பதவி யேற்றுக்கொண்டார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் இணை ஆணையராக இருந்த சிவராம்குமார் தஞ்சைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, திருவண்ணாமலை கோயில் இணை ஆணையராக இருந்த பிரகாஷ் திருச்சி ஸ்ரீரங்கம் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக பிரகாஷ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோயில் அலுவலர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.