சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கு: தப்பியோட முயன்ற குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுப் பிடிப்பு

0 56
Stalin trichy visit

திருச்சி, நவ.11  சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கு- தப்பியோட முயன்ற குற்றவாளி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுப் பிடிப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தீபாவளிப் பண்டிகை இரவில் நடந்த இரு சிறுவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த தீபாவளி இரவு சமயபுரம் பகுதியில் இரண்டு சிறுவர்கள் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பிடிபட்ட குற்றவாளிகளில் ஒருவரான சிவனேசன் (வயது 21, தந்தை பெயர்: பாண்டியன்) என்பவரை போலீசார் விசாரிக்க அழைத்துச் சென்றனர்.அப்போது அவர் காவலர்களிடம் இருந்து தப்பியோட முயன்றபோது போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் காலில் காயமடைந்த சிவனேசன் உடனடியாகக் காவல்துறையினரால் மீட்கப்பட்டு தீவிர பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனைக்குச்சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.