இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை – மிதிவண்டி வழங்கல்

0 61
Stalin trichy visit

திருச்சி, நவ.16 இந்திய வளர்ச்சி இயக்கத்தின் (AID INDIA) முப்பெரும் விழா.32 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் – 12 மாணவர்களுக்கு ரூ.2.50 லட்சம் கல்வி உதவித்தொகை.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செங்கரையூர் கிராமத்தில் Aid India – யுரேகா முப்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு லால்குடி கோட்டாட்சியர் உ. பாரூக் தலைமை தாங்கினார். Aid India மாநில திட்ட இயக்குநர் அ. ராஜபாண்டியன் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.

இவ்விழாவில் யுரேகா மாலை நேர வகுப்புகளில் பயிலும் 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் 32 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. கல்லூரிகளில் பயிலும் 12 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.2.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், மாநில அளவிலான கற்றல் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற 32 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

முன்னதாக, யுரேகா ஸ்போர்ட்ஸ் ஃபார் கேர்ள்ஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவிகள் சிலம்பம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் லால்குடி லயன்ஸ் சங்கத் தலைவர்நியூட்டன் வில்லியம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்  விவேக், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணன்,  மனோஜ்குமார்,  ரவி, திட்ட மேலாளர் ரேணுகா மற்றும் மாநில கருத்தாளர்செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி வாழ்த்தினர்.

திட்ட மேலாளர்நதியா வரவேற்புரையாற்றினார். மாநில கருத்தாளர் அருண்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஒன்றிய கருத்தாளர் குணதேவி நன்றியுரையாற்றினார். யுரேகா ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளர் கரோலின், ஒன்றிய கருத்தாளர்கள் சூர்யா மற்றும் ஜனனி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்புப் பணிகளையும் மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் இந்திய வளர்ச்சி இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராமங்களிலிருந்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.