போதைப் பழக்கத்தைத் தவெக நிர்வாகிகள் – எம்.எல்.ஏ-க்களிடமிருந்து முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி
திருச்சி, நவ. 17 சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பதிலளிக்கையில்.
கடந்த கால ஆட்சியைப் போல் இல்லாமல், மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என முதலமைச்சர் விஜய் கூறியதை வரவேற்கிறேன். ஆனால், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிச்சயமாக காங்கிரஸ் முதுகில் குத்தும்.
நாங்கள் எந்தக் கட்சியுடனும் (திமுக) மறைமுகக் கூட்டணியில் இல்லை. தவெக-வை எதிர்ப்பது போலவே திமுகவையும் எதிர்க்கிறோம். திமுக – பாஜக கூட்டணி நிச்சயமாக இல்லை. தமிழகத்தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, கைகள் உயர்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும்.
தவெக-வின் 6 மாத ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. பாடமே எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க முடியும்? மக்கள் மனம் குளிரும்படி ஆட்சி செய்ய வேண்டுமே தவிர, டாஸ்மாக் குளிரும்படி ஆட்சி செய்யக் கூடாது. டாஸ்மாக் மது பாட்டில்களைத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் நிர்வகிக்கப்போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மூலம் கள்ள ஓட்டுகள் நீக்கப்பட்டதால்தான் விஜய்யால் முதலமைச்சராக முடிந்தது.
விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், போதைப் பழக்கத்தைத் தவெக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடமிருந்து முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனுக்கு இணையாக முதல்வர் விஜய்யை வைத்து ‘அரோகரா’ போட்டதை முருக பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முதலமைச்சரைச் சட்டசபையில் கொண்டாடிக் கொள்ளுங்கள். முருகன் கோவிலில் கொண்டாடக் கூடாது.
மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது இந்த ஆண்டு தீபம் ஏற்றுவதற்குச் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத்தான் அதிக உரிமை உள்ளது என்பதை கர்நாடக முதல்வரும், தமிழக முதல்வரும் புரிந்து கொள்ள வேண்டும். நதி நீர் பங்கீட்டில் பாஜக பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை. பிரதமர் எந்த வகையிலும் தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைவிக்க மாட்டார்.
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா படுதோல்வி அடைந்துள்ளது. அதில் தமிழக முதலமைச்சருக்கு மேடை கூட ஒதுக்கப்படவில்லை. அந்த விழாவை அவர் புறக்கணித்திருக்க வேண்டும்.
நூலகங்களில் காஞ்சிப் பெரியவர் புத்தகங்களை வைக்க வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியது சரிதான். நீதிபதிகளுக்குப் பொதுவெளியில் வழக்கு குறித்துப் பேச அனைத்து உரிமைகளும் உள்ளன என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.