நூலக விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மீதும் சந்தேகம் உள்ளது : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
திருச்சி, நவ.17 அகல் விளக்கு விவகாரத்தில் FIR தாமதம் ஏன்? ராஜ்மோகன் மீதும் சந்தேகம் உள்ளது – திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமான பேட்டி
திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார்.
நூலக விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மீதும் சந்தேகம் உள்ளது
அகல் விளக்கு விவகாரத்தில் தான் சொல்லி ஒரு மாதம் ஆகியும் இப்போது தான் விசாரணைக்கு FIR போட்டிருப்பதாக கூறினார். இந்த FIR ஏன் இவ்வளவு காலதாமதம் என கேள்வி எழுப்பிய அவர், அதிலேயே ஊழல் இருப்பதாகவும், முன்னாடியே FIR போட்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மீதான போராட்ட வழக்கு வாபஸ் வாங்கியிருப்பது நல்ல வரவேற்புக்குரிய விஷயம் என்றும் கூறினார்.
சு.வெங்கடேசன் குறித்து நீதிபதி பேசிய கருத்துக்கு?
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான ஜீவானந்தம், மறைந்த நல்லகண்ணு போன்றவர்கள் ரயிலிலும், பேருந்திலும் தான் செல்வார்கள் என்றார்.
ஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மிக உயர்ந்த விலை உயர்ந்த காரில் வருவதாகவும், அது அவருடைய காரா, நண்பருடைய காரா என்பது குறித்து விவாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அது யார் கார் என்று தனக்கு தெரியாது என்றும், அவர் தான் விளக்க வேண்டும் என்றும் கூறினார்.
நல்லகண்ணு ஐயாவுக்கு கட்சி கொடுத்த ஒரு கோடி ரூபாயை அவர் திருப்பி கட்சிக்கே கொடுத்ததாகவும், இவர் கட்சிக்காக என்ன கொடுத்தார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும் என்றும் கூறினார். பொது வாழ்க்கைக்கு வரும் போது கேள்வி எழும் போது வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் காவேரி குறித்து முதல்வர் பேசாத குறித்த கேள்விக்கு?
காவிரி டெல்டா மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தையும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் இன்று தமிழக முதலமைச்சர் செய்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
நவம்பர் 4-ஆம் தேதி வரை 67 TMC தண்ணீர் வர வேண்டிய நிலையில், முதலமைச்சர் இது குறித்து வாய் திறக்கவில்லை என்றும், எந்த அறிவிப்பும் விடவில்லை என்றும், கர்நாடக முதலமைச்சர் சிவகுமாருக்கு எந்த வேண்டுகோளும் வைக்கவில்லை என்றும் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் போராடுவோம் என்று சொல்வதைத் தவிர வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
புத்தக வெளியீட்டு விழாவில் ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்சர், கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் உள்ளிட்டோர் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, முதலமைச்சர் காவிரி பிரச்சினை குறித்து ஏதாவது பேசினாரா என கேள்வி எழுப்பினார்.
இதனால் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் கருகி வீணாகிப் போயுள்ளதாகவும், இதற்கு முழு பொறுப்பு தமிழக முதலமைச்சர் விஜய் தான் என்றும் கூறினார். விவசாயம் பற்றியும், தமிழகத்தில் எந்த பிரச்சினை பற்றியும் அவருக்கு கவலை இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஒரு புத்தகத்தை 6 ஆயிரம் சீக்கியர்கள் எரித்திருப்பதாகவும், அவர்கள் ஏன் எரித்திருக்கிறார்கள்
சீக்கியர் படுகொலை பற்றி அதில் எழுதியிருக்கிறார்களா, இலங்கையில் நடந்த தமிழின படுகொலை பற்றி எழுதியிருக்கிறார்களா, முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் பேரை எரித்து கொன்றது பற்றி எழுதியிருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.
இலங்கை ராணுவத்தினர் மதிப்பிற்குரிய ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் அடித்தது பற்றி எழுதியிருக்கிறார்களா என்றும், KR நாராயணனை RK நாராயணன் என்று எழுதுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் விமர்சித்தார்.
மேலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 15 பேர் தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்தவர்கள் என்றும் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் விவகாரத்தில் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும், ஆட்சித் தலைவர் தான் மனு கொடுக்க வேண்டும், புகார் கொடுக்க வேண்டும் என அமைச்சர் சொல்வதாகவும் விமர்சித்தார்.
ஒரு அமைச்சர் காவல் நிலையத்திற்கு சென்று எத்தனை FIR இருக்கு என ஆய்வு செய்வதாகவும், பெண் காவலரை கூப்பிட்டு விசாரிப்பதாகவும், இதற்கு முன் எந்த அமைச்சரும் காவல் நிலையத்தில் சென்று FIR ஆய்வு செய்தது கிடையாது என்றும் கூறினார்.
ஒரு அமைச்சர் இரவில் SP-யை வீட்டுக்கு வாங்க என கூப்பிட்டிருப்பதாகவும், இரவில் என்ன விசாரணை என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
தீபாவளி அன்று மட்டும் 15 படுகொலை நடந்திருப்பதாகவும், அதை மாணிக்கம் தாகூர் நியாயப்படுத்துவதாகவும் கூறினார்.
செஞ்சியில் ஒரு குழந்தை காணாமல் போனது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதா என்றும், கடலூர் மாவட்டத்தில் மட்டும் அன்று 15 பேர் காணாமல் போனதாகவும், அதில் 7 பேர் குழந்தைகள், பெண்கள் என்றும் கூறினார். இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பத்திரிகைகளும், மீடியாக்களும் தாங்கள் சொல்லும் விஷயங்களை காட்டுவதில்லை என்றும் கூறினார்.
மேலும் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் குறித்த கேள்விக்கு?
வேல்முருகன் கொடுத்த விளக்கம் சரி என்றும், அவர் மன்னிப்பு கேட்கிற மாதிரியும் கேட்டிருப்பதாகவும் கூறினார்.
ஆனால் புஷ்பவனம் குப்புசாமி தன்னை தமிழறிஞர் என்று சொல்லிக் கொண்டு, கமா போட்டிருக்கேன், புல் ஸ்டாப் வைத்திருக்கேன் என்று சொல்வது கண்டனத்திற்குரியது என்றார். தெரியாமல் பேசி விட்டோம் என்று வேல்முருகன் மாதிரி சொல்லி விட்டு போயிருக்கலாம் என்றும், இனிமேல் குப்புசாமி இது போல் பேசக்கூடாது என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும் தமிழக பாஜக எப்போதுமே ஸ்ட்ராங்காகத் தான் இருக்கு என்றும், வரக்கூடிய காலம் பாரதிய ஜனதா கட்சியினுடைய காலமாக மாறும் என்றும் தெரிவித்தார்