இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் விதைகள் குறித்து மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம்

0 74
Stalin trichy visit

திருச்சி, நவ.18 இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் விதைகள் குறித்து மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடியில் உள்ள உழவன் அறக்கட்டளை சார்பில், ஊரக வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் (RAWE) NGO Attachment பயிற்சியின் ஒரு பகுதியாக, “கதைப்போமா” என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் புல இறுதியாண்டு மாணவர்கள் 11 பேரும், பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி RAWE மாணவர்கள் 11 பேரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் “ஏன் தேவை இயற்கை வேளாண்மை?” மற்றும் “எங்கே போனது நமது பாரம்பரிய நெல் விதைகள்?” ஆகிய தலைப்புகளில் பட்டிமன்ற விவாதங்கள் நடைபெற்றன. இதில் இரு கல்லூரி மாணவர்களும் இயற்கை வேளாண்மையின் அவசியம், பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம், பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதன் தேவை மற்றும் தற்போதைய வேளாண்மையில் அவற்றின் பங்கு குறித்து தங்களது கருத்துகளை முன்வைத்து விவாதித்தனர்.

உழவன் அறக்கட்டளையின் நிறுவனர் ஜெகன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக OMG Foods   நிறுவனர்,    ஜெயஸ்ரீ மற்றும்  சாய் அகாடமி நிறுவனர், முருகன்  ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். மேலும், இயற்கை விவசாயிகள் மற்றும் ரசாயன வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மாணவர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் ஆர்வலர்களிடையே இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய விதைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.