மணப்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
திருச்சி, நவ. 25 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (Government ITI) பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருச்சி மண்டல மண்டலப் பயிற்சி இணைய இயக்குநர் பி. பரமேஸ்வரி தலைமை வகித்தார். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) மு. முத்தழகி, முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் K. பிரபாகரன் மற்றும் சூர்யா நினைவு அறக்கட்டளை மற்றும் குர்யா சமுதாயக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் சூர்யா வெ. சுப்பிரமணியன், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் தொழில்திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான பயிற்சியின் முக்கியத்துவம், தொழிற்கல்வி மூலம் இளைஞர்கள் சுயசார்பு அடைவதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலர் M. ஆண்டவர் நன்றியுரை வழங்கினார்.
விழாவில் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.