த.வெ.க. எம்.ஏல்.ஏ. புகைப்படத்தை செருப்பால் அடித்து பா.ஜ.க.வினர் போராட்டம்
திருச்சி, நவ. 28 திருச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்:
த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் படத்தை செருப்பால் அடித்து போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யாத அரசை கண்டித்து, திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் நேற்று (நவ.27) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில், மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர் மாவட்ட தலைவர் திரு. கே. ஒண்டி முத்து தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மகளிர் அணியினர் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் படத்தை செருப்பால் அடித்து தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். “அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்”, “பெண்களுக்கு பாதுகாப்பு கொடு” உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பினர்.