திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து சாலை மறியல்
திருச்சி, நவ. 28 திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் நில அளவை தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் இன்று தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை கண்டித்து ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில் திருச்சி பழைய பால்பண்ணை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.