ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் அறிவியல் திருவிழா

0 9
Stalin trichy visit

திருச்சி, நவ.28  ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் உதவியுடன் ரூரல் டெக்னாலஜி சென்டர் தொடக்கம் மற்றும் மாபெரும் அறிவியல் திருவிழா

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-வது ஆண்டு அறிவியல் திருவிழா மற்றும் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜி பவுண்டேஷன் இணைந்து நடத்தும் ரூரல் டெக்னாலஜி சென்டர் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரிச் செயலாளர் ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி முதல்வர் உரையாற்றுகையில்
இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பாடத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் அவர்களை உயர் கல்வியில் அறிவியல் சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கவும் எங்கள் கல்லூரி சார்பில் ஆண்டுதோறும் அறிவியல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பள்ளி மாணவர்கள் எங்கள் கல்லூரி ஆய்வகங்களை இலவசமாகப் பயன்படுத்திப் பரிசோதனைகள் செய்ய அனுமதி அளிக்கிறோம். நேரில் வர இயலாத பள்ளிகளுக்கு எங்கள் பேராசிரியர்கள் குழு நேரடியாகச் சென்று ஆய்வகப் பயிற்சிகளை வழங்குகிறது. கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான உயர் கல்வியை வழங்குவதன் மூலமே சமூக முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற எங்கள் நிறுவனரின் உயரிய நோக்கத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

ஐஐடி மெட்ராஸின் இன்னோவேஷன் ஹப் ஆன ஐஐடிஎம் பிரவர்தக் அமைப்புடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இம்மையத்தின் மூலம் ஐஐடி மற்றும் முன்னணி நிறுவனப் பேராசிரியர்களால் வடிவமைக்கப்பட்ட நவீன தொழில்நுட்பப் பாடங்கள் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன. இம்மையத்தின் வசதிகள் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றியுள்ள பிற கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் பொதுவானதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் பிற கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மி அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

வரும் மாதங்களில் கல்லூரியின் உயிரியல் துறையுடன் இணைந்து ஒரு சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி (Ph.D) மாணவர்களுக்கு உயர்தர ஆய்வக வசதியும் செயல்முறைப் பயிற்சியும் கிடைக்கும். ஐஐடிஎம் பிரவர்தக் அமைப்பு சிஎஸ்ஆர் நிதியின் கீழ் நாடு முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வித்யாசக்தி திட்டத்தையும் தமிழ்நாட்டில் சுமார் 10 இடங்களில் ரூரல் டெக்னாலஜி சென்டர்களையும் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு ஐஐடி தரத்திலான கல்வியும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதலும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

கல்லூரி நிர்வாகிகள், அறங்காவலர்கள், முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.