உடல் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு
திருச்சி, நவ. 28 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, மேரீஸ் நகர், மலைக்கோயில் தெருவில் வசித்து வந்த பிரேமாவதி (85) அவர்கள் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவரது கண்களை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கும், உடலை திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தானமாக வழங்கி, மனிதநேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்திய அவரது குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பிரேமாவதியின் மகன்கள் திரு. அரசெழிலன், திரு. மாதவன் மற்றும் மகள் திருமதி வாசுகி ஆகியோரின் குடும்பத்திருக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது
இந்நிகழ்வில் கே.சி. நீலமேகம், வெ.இரா. சந்திரசேகர், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. செயலாபதி, திருக்குறள் பயிற்றகம் ஒருங்கிணைப்பாளர் சிவ. தளபதி, சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.