108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் மார்கழி மாதம் இறுதியிலும் தை மாதம் முதல் நாட்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் 19 வருடங்களுக்கு பின்னர் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தைத் தேர் உற்சவத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை நடத்த திட்டமிடுள்ளனர்.

டிசம்பர் 3ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கும் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதேசி விழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முடிவு எடுப்பார்கள் என கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.