இயற்கை இடுபொருள் தயாரிப்பு அலகிற்கு வேளாண் கல்லூரி மாணவிகளின் களப்பயணம்

0 13
Stalin trichy visit

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் (RAWE) ஒரு பகுதியாக, வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கோவில்வெணி கிராமத்தில் உள்ள IFFCO இயற்கை இடுபொருள் தயாரிப்பு அலகைப் பார்வையிட்டனர்.

இந்தக் களப்பயணத்தின்போது, அலகின் செயல்பாடுகளைக் கவனித்து வரும் ஓய்வுபெற்ற அலுவலர் செழியன் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இடுபொருட்களின் தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றின் நடைமுறைப் பயன்பாடுகளை மாணவர்களுக்கு விளக்கினார்.  குரு பஞ்சகவ்யா, மீன் அமிலம், பூச்சி விரட்டி மற்றும் போரான் கரைசல் ஆகியவற்றின் மூலப்பொருட்கள், தயாரிப்பு நுட்பங்கள் மற்றும் பயிர் உற்பத்தியில் அவற்றின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.