மணப்பாறையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

0 195
Stalin trichy visit

திருச்சி, மே 7  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இவர் இன்று மணப்பாறை எடத்தெரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரை ஸ்டார்ட் சென்ற போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீ எரிய ஆரம்பித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கவே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. சுட்டெரிக்கும் வெயிலில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.