தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் வாகனம் மோதி உயிரிழப்பு

0 266
Stalin trichy visit

திருச்சி, மே 2 திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிளை மான் உயிரிழந்தது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பிரிவு சாலையிலிருந்து ஒட்டம்பட்டி கிராமத்திற்கு இருந்து செல்லும் வழியில் சாலையோரம் சுமார் 2 வயது மதிக்கத்தக்க கிளைமான் அடையாளம் தெரியான வாகனத்தில் மோதி இறந்து கிடப்பதாக துறையூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

தற்போது கோடைக்காலம் என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வற்றிய நிலையில் ,குடிநீர் தேவைக்காக வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிக்கடி வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.