டெல்லியில் காவல்துறை தடியடியில் உயிரிழந்த விவசாயிக்கு நீதி கேட்டு முற்றுகை
சமயபுரம் சுங்கச்சாவடியில் டெல்லியில் காவல்துறை நடத்திய தடியடியில் உயிரிழந்த விவசாயிக்கு நீதிகேட்டு முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
திருச்சி, பிப். 23 திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த விவசாயிக்கு நீதி கேட்டு நேற்று காலை 11.30 மணி அளவில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அனைத்து பயிர்களுக்கும் ஆதார விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தடுப்புகளை உடைத்து டிராக்டரில் தலைநகரை நோக்கி சென்ற போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார். தடியடி நடத்தினர்.இதில் விவசாயி் ஒருவர் உயிரிழந்தார்.பலர் காயமடைந்தனர். இந்நிலையில்
டெல்லியில் உயிரிழந்த விவசாயிக்கு நீதி கேட்டு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 22 ந்தேதி வியாழக்கிழமை நேற்று காலை 11.30 மணிக்கு திருச்சி சமயபுரம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சமயபுரம் காவல்துறையினர் அய்யாக்கண்ணுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடி ஏற்படாத நிலையில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்து சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.