இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 526 சதுர அடி தேசிய கொடி உருவாக்கி சாதனை!

0 28
Stalin trichy visit

துட்டம்பட்டி அரசு மாதிரி பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்  தமிழ்செல்வன்(வயது 10)  இவரது தங்கை இடையப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளி மூன்றாம் மாணவி  நா. செந்தமிழும்(வயது 8)  இவர்கள் இருவரும் இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 மீட்டர் நீளம், 2 அடி அகலம் கொண்ட தேசியக் கொடி மொத்தம் 526 சதுர அடியில் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.  இதுகுறித்து இவரும் கூறுகையில், 

எனது அம்மாவின் பெயர் ப்ரியா எனது அப்பாவின் பெயர் நன்றி நாராயணசாமி. அப்பா அம்மா இருவரும் நெசவாளர்கள். அப்பா நன்றி நாராயணசாமி பல உலக சாதனைக்கு சொந்தக்காரர் நன்றி என்ற வார்த்தை மற்றும் தமிழ் எழுத்து ஓவியங்கள் மூலம் உலக சாதனைகள் பல செய்துள்ளார்.

அப்பாவின் சாதனைகளை பார்த்து எனக்கும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது நானும் சாதிக்க வேண்டும் என்று அப்பாவிடம் கூறிய போது அவர் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக ஒரு சிறப்பான சாதனை முயற்சியை சொன்னார். அப்பா, அம்மா அவர்களின் வழிகாட்டுதல் படி அவர்கள் சொல் கேட்டு நாங்கள் முயற்சி செய்தோம்.

கோடை விடுமுறை நாளில் அப்பா எங்களுக்கு தறி ஓட்ட கத்து கொடுத்தார். அப்பா,அம்மா அவர்களின் துணையோடு நானும் எனது தங்கையும் நமது இந்தியாவின் 80 தாவது சுதந்திர தினத்திற்கு நமது தாய் திருநாட்டிற்கு நன்றி தெரிவிப்போம் என்று முடிவு செய்து 80 மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண (ஆரேஞ்சு. வெள்ளை பச்சை.) தேசியக்கொடியை நாங்கள் எங்கள் தறியில் நெசவு செய்து நமது தேசத்திற்கு நன்றி தெரிவிக்கின்ற விதமாக நாங்க இதை முயற்சி செய்தோம். 80 மீட்டர் நீளம் 2 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி மொத்தம் 526 சதுர அடி கொண்ட இந்த பிரமாண்டமான தேசிய கொடியை தறியில் நெசவுசெய்ய துவக்கி வைக்க இந்திய கிரிக்கெட் வீரர்T. நடராஜன்  முன்னிலையில் நாங்கள் சிறப்பாக தொடங்கினோம்.

எங்களது இந்த சாதனையை டிராகன் ஜெட்லீ., Guinness world records medallist  தலைமையில் ரெக்கார்ட்ஸ் இந்தியா அகாடமி உலக சாதனை சான்றிதழ்கள் நேரில் பார்த்து எங்களுக்கு வழங்கினார்கள் எங்களது இந்த சாதனை முயற்சியானது நாங்கள் விரும்பும் எதிர்கால இந்தியாவிற்காக நாங்கள் சமர்ப்பிக்கிறோம்

1. போதை பொருள் இல்லாத எங்கள் இந்தியா

2. பாலியல் வன்கொடுமை இல்லாத எங்கள் இந்தியா

3. குழந்தை தொழிலாளர்கள் இல்லாத எங்கள் இந்தியா

4. ஜாதி மத பேதம் இல்லாத எங்கள் இந்தியா

5. எல்லைப் போர் இல்லாத எங்கள் இந்தியா

6. லஞ்சம் ஊழல் இல்லாத எங்கள் இந்தியா

7. யாசகர்களே இல்லாத எங்கள் இந்தியா

8. அனைவருக்கும் கல்வி வழங்ககும் எங்கள் இந்தியா

9. வலுவான வளமான அமைதியான எங்கள் இந்தியா

10. வேற்றுமையிலும் ஒற்றுமை எங்கள் இந்தியா

ஆகிய கோரிக்கைகளோடு நாங்கள் எதிர்பார்க்கும் எங்கள் கனவு இந்தியாவிற்கு நாங்கள் உருவாக்கிய நமது மூவர்ண தேசியக்கொடி சாதனையை நமது தேசத்திற்கு நன்றிவுணர்டன் சமர்ப்பித்துக் கொள்கிறோம் என்று  தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.