குளத்தில் மூழ்கிய இருவரை துணிச்சலுடன் காப்பாற்றிய பள்ளி மாணவர்

0 401
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அருகே உள்ள கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி மகள் விஸ்வஜோதி (வயது 12). இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள முத்தாளம்மன் குளத்தில் நண்பர்களுடன் நீரில் இறங்கி விளையாடிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த விஸ்வஜோதியுடன் அவரது சகோதரி மகரஜோதி மற்றும் தேவதர்சினி, ரவிபிரகாஷ் ஆகியோரும் குளத்தில் இருந்தனர். இதில் விஸ்வஜோதி உள்ளிட்ட நால்வரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். அப்போது அங்கிருந்த படிக்கட்டில் அமைந்திருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிவேல்ராஜ் மகன் 8 ம் வகுப்பு படித்து வரும் சபரீஸ்வரன் (வயது 13) என்ற சிறுவன் உடனே குளத்தில் இறங்கி நீரில் மூழ்கிய விஸ்வஜோதி, மகரஜோதி, தேவதர்ஷினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகியோரை மீட்க முயன்றுள்ளார். ரவிபிரகாஷ் மற்றும் தேவதர்சினி ஆகிய இருவரையும் தலை முடியைப் பிடித்து வெளியே இழுத்து வந்து மீட்டுள்ளார். மகரஜோதி தானாகவே வெளியேறிய நிலையில் விஸ்வஜோதி மட்டும் நீரில் மூழ்கி விட்டார். அதன் பிறகு தான் அனைவரும் சப்தம் போடவே அருகில் சாலையில் சென்றவர்கள் உதவ முன்வராத நிலையில் ஊருக்குள் சென்று அச்கிரந்தவர்களை அழைத்து வந்துள்ளனர். முருகேஸ்வரி என்ற பெண் அவரின் உறவினரின் உதவியுடன் விஸ்வஜோதியை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். ஆனாலும் அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் சரியான நேரத்தில் சம யோசிதமாக செயல்பட்டு இரண்டு உயிர்களை காப்பாற்றிய 13 வயது சிறுவனின் துணிச்சலான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அனைவரும் பாரட்டி வருகின்றனர். இருப்பினும் கண்முன்னே சிறுமி நீரில் மூழ்கிய இறந்ததை மறக்க முடியாமல்
மருத்துவமனையில் அழுது கொண்டிருந்த சிறுவன் சபரீஸ்வரனை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி அழைத்துச்சென்றது அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

Leave A Reply

Your email address will not be published.