வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

0 172
Stalin trichy visit

திருச்சி, செப்.26 மணப்பாறை அருகே ஆசிரியர்‌ வீட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு.
பத்திரமாக பிடித்த தீயணைப்புத்துறையினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் பள்ளி ஆசிரியரான தவமணி. இவர் வீட்டின் பின்பக்கம் கட்டிட பணிக்காக டைல்ஸ் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். இன்று டைல்ஸ் பெட்டிகளின் அருகே பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்ட வீட்டினர் உடனடியாக மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் டைல்ஸ் பெட்டிகளை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தினர். அப்போது ஒரு பெட்டியின் அடியில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாம்பு பிடிக்கும் கருவியால் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பாம்பை பிளாஸ்டிக் குழாயில் அடைத்து பொய்கை மலை வனப்பகுதியில் விடுவித்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.