மணப்பாறை அருகே வீட்டின் மீது மோதி நின்ற லாரி

0 145
Stalin trichy visit

திருச்சி, செப்.26 மணப்பாறை அருகே வீட்டின் மீது மோதி நின்ற லாரி.
கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆர்.எஸ்.வையம்பட்டி பகுதியில் அந்த வழியாக சிமெண்ட் ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஊர் பெயர் பலகையை இடித்துக் கொண்டு கடைகள் மீது மோதி அருகில் உள்ள வீட்டின் முன்பக்க சுவர் மீது மோதி நின்றது. இதில் கடைகளின் மேற்கூரைகள் மற்றும் வீட்டின் மேற் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் லாரியை அதன் ஓட்டுனர் சாமர்த்தியமாக நிறுத்தி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.