சமயபுரம் அருகே சாலை விபத்தில் பெண் பலி

0 548
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாடு மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

திருச்சி திருவானைக்காவல் அழகியபுரம் 3 வது தெருவைச் சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மனைவி் 48 வயதான நகோமி. இவர் தனது மகன் பிரவீன்ராஜூனுடன் மோட்டார் பைக்கில் சமயபுரத்திலிருந்து திருவானைக்காவல் நோக்கி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது பளூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது.இதில் எதிர்பாராத விதமாக மாடு மீது மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பின்னால் அமர்ந்திருந்த நகோமி படுகாயமடைந்தார்.அவரை மீட்டு்108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டார் என கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.