போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கேமிராக்கள், ரொக்கப்பணம் கொள்ளை

0 732
Stalin trichy visit

மணப்பாறையில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து ரூ.8.40 லட்சம் மதிப்பிலான இரண்டு கேமராக்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் கொள்ளை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பழைய காலணியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25). இவர் திருச்சி சாலையில் லைட் அன்ட் ஷேடு என்ற பெயரில் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று காலை  கடைக்கு வந்து பார்த்தபோது ஷட்டரில் உள்ள இரண்டு பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது ரூபாய் 840,000 மதிப்புள்ள இரண்டு கெனான் கேமராக்கள் மற்றும் ரூபாய் 4000 ரொக்கப்பணம் திருட்டு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.