திருச்சி மாவட்டம் துறையூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணவறை அலங்கரிக்கும் பணிக்கு திருவானைக்காவல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரது மகன் சரத் (24) தனது குழுவினரோடு நேற்று சென்றார்.அப்போது இரும்புக் குழாய் தூக்கிச் சென்றபோது உயரழுத்த மின்கம்பியில் மோதி மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்ட சரத் உயிரிழந்தார்.இதுகுறித்து துறையூர் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வந்தார் – இந்நிலையில் சரத் உறவினர்களிடம் பிரேத பரிசோதனையை முடித்து தர எஸ்.ஐ சேகர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.5 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு இன்னும் கூடுதலாக எஸ்.ஐ பணம் கேட்டதை அடுத்து இது குறித்து சரத்தின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ சேகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.