வரதட்சணையாக கார் கேட்டு மனைவிக்கு டார்ச்சர்; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

0 305
Stalin trichy visit

திருச்சி அண்ணாமலை நகர் மலர் சாலையை சேர்ந்தவர் ஐஸ்வர்யாகாயத்ரி (வயது 25). இவரும் திருச்சியை சேர்ந்த ராஜபாண்டியன் (25) என்பவரும் காதலித்து கடந்த 2018 ஜூலை 17ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மனைவியிடம் கூடுதலாக கார் கேட்டு கணவர் ராஜபாண்டியன் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜபாண்டியன் வெளிநாடு சென்றார். இதுகுறித்து ஏமாற்றம் அடைந்த ஐஸ்வர்யாகாயத்ரி,

 

திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசுக்கு நீதிமன்ற நீதிபதி உத்தர விட்டார். உத்தரவை அடுத்து எஸ்ஐ நளினி விசாரணை நடத்தி கணவர் ராஜபாண்டியன், மாமனார் கணேசகுமார், மாமியார் சுசீலாதேவி, உறவினர் விஜயகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.