ஞீலிவனேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம்; 13ம் தேதி மதியம் நடக்கிறது…!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலியில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருநாவுக்கரசர், திருஞான சம்மந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு திருத்தலமாகும். இக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக
ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் கொடிமரத்திற்கு முன்பாக எழுந்தருளினர். கொடிமரம் முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து கொடியேற்றப்பட்டது. விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13ம் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது.