கிராமப்புற மதிப்பீட்டில் வரைபடங்கள் வரைந்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

0 298
Stalin trichy visit

திருச்சி, ஏப். 30 திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற மதிப்பீட்டில் வரைபடங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் சமூக வரைபடம், வென் வரைபடம், நகர்வு வரைபடம், பிரச்சனை மரம், தினசரி நடவடிக்கை கடிகாரம் மற்றும் போக்கு பகுப்பாய்வு ஆகிய வரைபடங்கள் மூலம் கிராமப்புற மதிப்பீட்டில் கிராம மக்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.
இதில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பரமசிவம் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவிகளான திவ்ய ரேச்சல், ஹெர்லின், இஷ்ரத் ரிகானா, ஜனனி, ஜெயந்திகா, ஜெனோ வெர்ஜின், ஜனனி மற்றும் ஜோதி முகுந்தா
வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.