வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணை முறை விவரித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணை முறை விவரித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் சித்தமல்லி தென்பாதி கிராமத்தில் உள்ள இளஞ்செழியன் அவர்களது ஒருங்கிணைந்த பண்ணை முறையை பார்வையிட்டனர்.
பரண்மேல் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ,மீன் வளர்ப்பு ,வாத்து வளர்ப்பு மேலும் 40 ஏக்கர் நெல் சாகுபடியும் செய்து வருகிறார். ஜமுனா பாரி, கொடியாடு , தலச்சேரி ஆகிய ஆடு வகைகளையும் Goose என்ற வாத்தையும் வளர்த்து வருகிறார். மீன் குட்டையில் ரோகு, கட்லா ,மிருகல் ஆகிய மீன் வகைகளை வளர்த்து வருகிறார். மேலும் பயிர் சாகுபடியுடன் இணைந்து மீன்வளர்ப்பினையும் மேற்கொண்டுள்ளார். தென்னை, கல்யாண முருங்கை, கிளைரிசிடியா, ஆகிய மர வகைகளையும் குறுகிய இடங்களில் பராமரித்து வந்துள்ளார். முட்கள் இல்லா மூங்கில் மரத்தையும் வளர்த்து வருகிறார். கோழியின் எச்சங்கள் மீன்களுக்கு உணவாக பயன்படுத்துவதுடன்
கூஸ் வாத்து தாவரங்களை உணவாக உட்கொள்வதால் மீன்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் குட்டையில் இருப்பதில்லை. இதன் மூலம் கல்லூரி மாணவிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்களை அறிந்து கொண்டனர்.