அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சார்பில் கருத்து கேட்பு கூட்டம்
திருச்சி, ஜன.9 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை 2026 முன்னிட்டு அதிமுக தேர்தல் தயாரிக்கும் குழுவினர் பொதுமக்கள், வணிக சங்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு தொழில் சார்ந்த கூட்டமைப்பினரிடம் கருத்து கேட்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக 2021 ஆட்சி அமைத்ததில் இருந்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் தட்டை ஏந்தி பிச்சை எடுக்கின்ற சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு கண்ணீர் சிந்துகின்ற நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் கொள்ளையடித்த பணத்தை செலவு செய்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். நாலு லட்சம் கோடி திமுக அரசு கொள்ளையடித்து உள்ளது என ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாமல் பெயரை மாற்றி, வேறு திட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கவலை இல்லை என்று உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்கு ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அந்த ஆசை எப்போதும் நிறைவேறாது என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
தமிழகத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது குறித்த கேள்விக்கு
அடக்குமுறை அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு பொதுமக்களை ஒடுக்குகின்ற அரசாங்கம் தான் திமுக. ஜனநாயக விரோத அரசு திமுக. அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்களிடம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் போராட்டக்காரர்களை அழைத்து கூட பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தேர்தல் நேரத்தில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு..
இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஜனநாயகன் படத்தில் காண தீர்ப்பு நாளை வருகிறது. கலைத்துறை என்பது வேறு அரசியல் என்பது வேறு.
விஜய் காங்கிரஸ் கட்சியுடன் பதினெட்டாம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு..
இதுகுறித்து த.வெ.க. நிர்வாகிகளிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். யார் யாரோடு கூட்டணிக்கு சென்றாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
அதிமுக ஆட்சியில் இலட்சக்கணக்கில் மடிக்கணினி கொடுக்கப்பட்டது 2021ல் கொடுக்க வேண்டிய மடிக்கணினியை திமுக அரசு எப்போது கொடுக்கிறது தேர்தல் நடக்குவதால் இப்போது மடிக்கணினி கொடுக்கப்படுகிறது என்றார்.