குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா
திருச்சி, ஜன.9 குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இரண்டாவது முறையாக சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் – பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை
நீதிபதிகள் சுவாமிநாதன், சரவணன், வெங்கடேசன், கார்த்திகா, நசிர் அலி, அனுசுருதி,பரம்வீர், விஜயா,டார்வின் முத்து, சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்
நிகழ்ச்சியில் கோலம் போட்டி, பானை உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்று பரிசுகளும் வழங்கப்பட்டது மேலும் விழாவை சிறப்பிக்கும் வகையில் மதுரை ஜல்லிக்கட்டு பரிசு பெற்ற காளைகள்களை வழக்கறிஞர் பொன் முருகேசன் மற்றும் தாணு அவர்களால் வரவழைக்கப்பட்டது நம் தமிழர் கலையான சிலம்பாட்டம், சுருள், தீ பந்தம் சுற்றி காண்பித்து வழக்கறிஞர் ஷாம், சுபாஷினி குழுவினர் அசத்தினர் இதில் பெண் வழக்கறிஞரும் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை வியக்க வைத்தார்.
நீதிபதிகள் கார்த்திகா, விஜயா ஆகியோர் பொங்கல் பானைக்கு சூடம் ஏற்றி வைத்தனர் நீதிபதி கார்த்திகா பானை உடைத்தல் போட்டியில் கலந்து கொண்டு பானை உடைத்து பரிசை வென்றார் என்பது சிறப்பம்சமாகும் விழாவில் சக நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பெருமை என்ற தலைப்பில் வழக்கறிஞர் விவேக் உரையாற்றி பிறகு கலை காவேரி பரதக் கலைஞர் ஷர்மிளா பரதநாட்டியம் அனைவரையும் வரவேற்றது தமிழ் மற்றும் அதன் மகத்துவத்தை பற்றி பேச்சாளர் விஜய் சீத்தாராமன் அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் உரையாற்றினார் மேலும் மூத்த வழக்கறிஞர்கள் ஸ்டானிஷ்லாஸ், ஜேசு பால்ராஜ் , சிவராஜ் உடன் சங்க நிர்வாகிகள் தலைவர் P. சுரேஷ், செயலாளர் P. V. வெங்கட்,துணைத் தலைவர்கள் R. பிரபு, S. சசிகுமார் இணைச் செயலாளர் B.விஜய்நாகராஜன் பொருளாளர் S. R. கிஷோர் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எழிலரசி, பிரியா, கனிமொழி, ரங்கீலா, விஜயலட்சுமி, கௌசல்யா, விஜயன், ஜெயராமன்,பொன் முருகேசன், பாக்கியநாதன், அகிலன், ஜானகிராமன், முத்துக்குமார், அர்ஜுனன், கம்பன், முருகேசன், ரஞ்சித் குமார், ஹரி பாஸ்கர், முத்துகிருஷ்ணன், பாலமுருகன், மில்லர் ராஜ், கதிரேசன், அருண் சித்தார்த் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினார்கள் . 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.