அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் : காப்பக குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கல்
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அம்பிகாபுரம் செர்வைட் குழந்தைகள் காப்பகத்தில் MGR நினைவுநாளினை முன்னிட்டு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு.. காலை உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ATP N.கார்த்திக் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள் S.S.ராவணன், நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் A.தண்டபாணி, M.பாலசுப்பிரமணியன், அணி செயலாளர்கள் KS.பாஸ்கர், S.ராஜமணிகண்டன், M.சுரேஷ்குமார், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் சார்பு அணியை சார்ந்த செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்