திருச்சியில் நடைபெற்ற அதிமுக 55-வது தொடக்கவிழா பொதுக்கூட்டம் – நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, அக்.20 அதிமுகவின் 55-வது கழக துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு கழக துவக்க விழா தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பாலக்கரை பருப்பு கார தெருவில் மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட கழக அவைத் தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு கழகத் துணைச் செயலாளர் வெல்லமண்டி சண்முகம், எடத்தெரு வடக்கு பகுதி கழக செயலாளர் மலையப்பன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், தலைமைக் கழக இளம் பேச்சாளர் மல்லன் வில்லியம் பீட்டர், மாநகர் மாவட்ட கழக இணைச் செயலாளர் ஜாக்லின், கழகத் துணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, கழகப் பொருளாளர் ஜெயக்குமார், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.