தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்

0 222
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாற்றுக் கட்சி மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
திருச்சி தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட அரியமங்கலம் பகுதியை சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரியமங்கலம் பகுதியை சார்ந்த ராஜமவுளி மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் தலைமையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளி கல்லூரி அமைச்சருமான அன்பின் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மண்டல தலைவருமான மதிவாணன் அரியமங்கலம் பகுதி செயலாளர் விஜயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.