மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

0 17
Stalin trichy visit

திருச்சி, மே 25  மணப்பாறையில் 30 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக தங்களுடன் படித்து இறந்து விட்ட மாணவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் மாணவர்கள் தங்கள் படித்த காலங்களில் நடந்த பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதே போல் ஆசிரியர்களும் மலரும் நினைவுகளை கூறினர். இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்று வித்த ஆசிரியையிடம் அடி வாங்கி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நிறைவாக ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும், மாணவர்களுக்கு ஆசிரியர்களும் உணவு  பரிமாறி நிகழ்வை சிறப்பாக்கினர்.

Leave A Reply

Your email address will not be published.