கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கம் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஊர்வலம்

0 117
Stalin trichy visit

திருச்சி, மே 25 கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கத்தை கண்டித்து திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சி என விமர்சனம் செய்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கண்டித்தும், ஒன்றிய அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட Cockroach Janata Party சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டதை கண்டித்தும் திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி சென்றனர்.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சேதுபதி தலைமையில் கண்டோண்மென்ட் எம்.ஜி.ஆர் சிலை அருகில் இருந்து தொடங்கி ஊர்வலம் அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.