திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஏப். 12 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி சமத்துவ நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.