பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : இளைஞர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வாலிபர் உயிரிழந்தார். பெண் படுகாயம் அடைந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே ஆயக்குடி சாக்ஸிடு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன்(30). இவர் தனது மோட்டார் பைக்கில் அக்கரைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் ஆயக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(47) .இவர் தனது மோட்டார் பைக்கில் அதே சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் சமயபுரம் அருகே அக்கரை பட்டியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் நடராஜன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பதில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கப் பக்கத்தினர் படுகாயம் அடைந்த சரஸ்வதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்த தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த நடராஜன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.