கொள்ளிடம் ஆற்றில் பழமைவாய்ந்த கட்டுமானம் கண்டுபிடிப்பு : சோழர் காலத்தில் கட்டப்பட்டதா?

0 15
Stalin trichy visit

திருச்சி, ஆக.10 லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் பழமைவாய்ந்த கட்டுமானம் கண்டுபிடிப்பு சோழர் காலத்தில் கட்டப்பட்டதா?

திருச்சி மாவட்டம், லால் குடி அருகே கூகூர் வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. இங்குள்ள மூங்கிலடியான் கோவிலின் பின்புறம் கொள் ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடத் தின் கட்டுமானம் காணப்பட் டது. சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள், அந்த கட்டுமா னத்தை பார்த்தனர். அதன் மீது ஏறி நின்று பார்த்தபோது கிணறு போன்று அப்பகுதி மிக ஆழமாக இருந்தது.அந்த கட்டுமானத்தின் அரு கில் பழமை வாய்ந்த தடிம னான மண் பானை ஒன்று ஏ ஒன்று இருந்தது. அந்த கட்டுமானம் சுட்ட செங்கற்களால் கட்டப் பட்டுள்ளது. ஒவ்வொரு கல் லும் 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்டதாகஉள் ளது. ஒரு கல்லின் மீது கருப்பு பசை போன்ற ஒன்றை வைத்து, அதன் மீது மற்றொரு கல்லை வைத்து கட்டியதை போன்று காட்சியளிக்கிறது.

ஆனால் சாதாரணமாக அந்த கற்களை எடுக்க முடிய வில்லை. கட்டுமானத்தின் நடுவில் தூண் போன்று உள் ளது. கொள்ளிடம் ஆற்றில் தற்போது தண்ணீர் குறைந்து இருப்பதால், ஆற்றில் புதை யுண்டு இருந்த இந்த கட்டுமா னம் வெளியே தெரிவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கட்டுமானம் சோழர் காலத்தில் மன்னர்க ளால் சுட்டப்பட்ட கட்டிட மாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டுமானம் உள்ள பகுதிக்கும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கும் இடையே சுமார் 15கிலோமீட்டர் தூரமே உள் ளது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட அதி காரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கட்டுமானத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.