சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி, ஆக.10 சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதம்-பரபரப்பு
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல் கின்றனர். மேலும் ஆடி அமா வாசை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரு வார்கள். இந்நிலையில் கோவி லின் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்குரதவீதி, வடக்கு ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொம்மை கடைகள், பிரசாத கடைகள், பூக்கடைகள் உள் ளிட்ட பல்வேறு கடைகளின் முன்புறம் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்தது.
இதனால் கோவிலுக்குள் செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக பக்தர்கள் தரப் பில் இருந்து பேரூராட்சி நிர் வாகம் மற்றும் மாவட்ட நிர் வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கோவிலின் புனிதத்தை காத்திடும் வகையிலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் ஆக் கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத் தப்பட்டு வந்தது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் இந்நிலையில் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் அறிவுறுத்தலின்படி ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் 30-க்கும்மேற் பட்டோர் சமயபுரத்தில் கிழக்குரதவீதி, தெற்குரதவீதி மேற்கு ரதவீதி ஆகிய பகுதி களில் இருந்த ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் பேரூராட்சி பணியாளர்களுக் கும் கடை உரிமையாளர்க I ளுக்கும் இடையே வாக்குவா -டர்ந்து சமயபுரம் போலீஸ் தம் ஏற்பட்டது. இதைத்தொ இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர்கள் முரளி, பாலசுப் பிரமணி மற்றும் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இத னால் சமயபுரத்தில் தேற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணி இன் றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடரும் என்று பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது