உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

0 217
Stalin trichy visit

திருச்சி, நவ.25  தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

உலகத்தின் தொன்மையான நாய் இனத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பாதுகாக்காமல் அழிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது . கல் தோன்றி மண்தோன்றா காலத்தை நாடுகளும், மொழிகளும் உருவாவதற்கு முன்பிருந்து பூமியில் ஆதி மனிதர்களோடு வாழ்ந்து வந்திருக்கும் இந்த நாய்களை பாதுகாக்காமல் ரயில் நிலையம், விமான நிலையம், காவல் நிலையம், மருத்துவமனை போன்ற இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை என்பது நாளை தேருவில் உள்ள பூங்கா, ரேஷன் கடை, டீக்கடை, தபால் ஆபீஸ் போன்ற இடங்களுக்கும் இது பொருத்தமாகிவிடும்.

இந்த நாய்கள் தொல்குடிகள், கீழடி ஆதிச்சநல்லூர் போன்ற முடிந்து போன நம் தொன்மையான பெருமைகளை ஆராய்ச்சி செய்யும் அதே நேரம் நம்மோடு இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வகுடி நாய்களுக்கு ஆதி அந்தஸ்து வழங்கி அதை பாதுகாக்குமாறு இந்த ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துகிறது. இது தெரு நாய் அல்ல! உலகத்தின் பூர்வகுடி நாய். இயற்கையாகவே தன் துணையை தேர்வு செய்து மருத்துவ உதவி சரியான உணவு இல்லாமல் தனது ஊக்கத்தால் கொலைகளையும் கருத்தடைகளையும் மீறி சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட் என்ற கோட்பாட்டிற்கு ஏற்றவாறு வாழ்ந்து வந்துவிட்டது. இதன் திறமையையும், இனத் தொன்மையையும், உடல் வலிமையையும், அரசாங்கம் ஆய்வு செய்து நம் நாட்டின் பெருமைக்குறிய ஆதி மனிதனின் நண்பன் மற்றும் ஆதி இன நாய்களை உரிய அந்தஸ்துடன் ஆவணம் செய்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

ஆர்ப்பாட்டத்தில் விலங்கு நல ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் அர்ச்சனா,பிரியா, பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்பின் தலைவர் ஹரிணி, அஜய் பரத், ராம், வித்யா ஆகியோர் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Leave A Reply

Your email address will not be published.