திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் நியமனம்
திருச்சி, ஜன.2 திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக சத்யபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணி மாறுதல் வழங் கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக (அய்.ஜி.யாக)
இருந்த சந்தோஷ்குமார். சென்னை காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு அய்.ஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த கார்த்திகேயன் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவராக (அய்.ஜி) நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி, மாநகர காவல் ஆணையராக காஞ்சிபுரத்தில் துணைத் தலைவராக பணியாற்றிய சத்யபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல்துறை கடந்த 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிந்துள் ளது. இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறையில் முதல் முறையாக பெண் அய்பிஎஸ் அதிகாரி ஒருவர் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்/ சத்யபிரியா ஏற்கெனவே திருச்சி மாநகர துணை ஆணையராக சிறிது காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார், திருச்சி திருந்த ரயில்வே காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அதிவீர பாண்டியன் சென்னைதாம்பரம் துணை ஆணை யராக ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.