பள்ளிவாசல் தலைவர் வீட்டுக்கு தீ வைப்பு : சிறுவன் உள்பட 3 பேர் கைது
திருச்சி, டிச. 5திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ் மேன் காலனி 13வது தெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபார் (44) இவர் அதே பகுதியில் கறிக்கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த வாரம் தனது மனைவி இரண்டு மகள்கள் மற்றும் அம்மாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள், குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் வீட்டின் மாடிக்கு சென்று தண்ணீர் டேங்க்கையும் உடைத்துள்ளனர் பின்பு மேலிருந்து ஆஸ்பிடஸ் செட் வழியாக குதித்து கீழே இறங்கி பின்பக்க வழியாக போய் பின்பக்க தாழ்ப்பாளை உடைத்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்த முட்டைகளை எடுத்து கீழே போட்டு உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஏதோ தீப்பிடித்து எரிகிற வாடை அடிப்பதாக கூறி திடீரென எழுந்துள்ளனர். அப்பொழுது வெளியே சென்று பார்த்த பொழுது மோட்டார் சைக்கிளும் குளிர்சாதனப்பெட்டியும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
மேலும் இது குறித்து அப்துல் கஃபார் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து வீடு புகுந்து மிரட்டும் வகையில் மோட்டார் சைக்கிள் மற்றும் குளிர்சாதன பெட்டியை எரித்து விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த பகுதியின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு பெய்த போது அதனடிப்படையில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் பள்ளிவாசல் முன்னாள் மத குருவான அரியமங்கலம் முனியப்பன் தெருவை சேர்ந்த முகமது இப்ராகிம் சாதிக் (43) மற்றும் பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஜெகதீஷ் (17) ஆகிய 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முகமது இப்ராகிம் சாதிக்கை திருச்சி மத்திய சிறையிலும் சிறுவன் ஜெகதீஸை சிறுவன் ஜெகதீலை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
இந்த வழக்கில் அப்துல் கஃபாரின் தந்தை பள்ளிவாசலில் முன்னாள் மத குருவாக இருந்துள்ளார். அதன் பிறகு 2006ம் ஆண்டு தென்காசியை சேர்ந்த முகமது இப்ராஹீம் சாதிக் மதகுருவாக அதே பள்ளிவாசலில் இருந்துள்ளார். அப்போது முகமது இப்ராஹிம் சாதிக் பள்ளிவாசலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பள்ளிவாசலில் உள்ளவர்கள் மற்றும் தற்போது பள்ளிவாசல் தலைவராக இருக்கும் அப்துல் கஃபார் உள்ளிட்டவர்கள் முறைகேடு பற்றி தட்டி கேட்டுள்ளனர். இதன் காரணமாக முகமது இப்ராகிம் சாதிக் பள்ளிவாசலில் இருந்து விலகுவதாக ராஜினாமா லெட்டர் எழுதி கொடுத்துவிட்டு விலகி விட்டதாகவும் மேலும் அதிலிருந்து முகமது இப்ராகிம் சாதிக் மற்றும் அப்துல் கஃபார் அனைவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் பழிவாங்கும் எண்ணத்தில் அப்துல் கஃபார் வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் மற்றும் குளிர்சாதன பெட்டியை தீவைத்து எரித்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது