கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர், மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாமன்ற உறுப்பினர்கள் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.